கணினியில் கோப்புகளை முடக்கி வைத்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டும் 'ரான்சம்வேர்' வைரஸிடம் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

'ரான்சம்வேர் வைரஸ்' நாம் கணினி மற்றும் இணைய சேவையை பயன்படுத்தும் போது சில ஆங்கில எழுத்துக்கள் கலந்த அர்த்தமற்ற மொழியில் கட்டளைகளை பிறப்பிக்கும். எதிர்பாராமல் அதை கிளிக் செய்தால் நம் கணினியில் உள்ள கோப்புகள் உடனே முடக்கப்படும். முடங்கிய கோப்புகளை மீட்க, உங்களுக்கு தொடர்புடைய மற்றொரு இணைய முகவரியை கொடு என அந்த வைரஸ் கட்டளையிடும்.
இதனால் இணைய முகவரி மற்றும் அது தொடர்பான பயன்பாடுகள் அனைத்தும் முடங்கும்.பணம் கேட்டு மிரட்டல்முடக்கப்பட்ட கோப்புகளை மீட்க 'பிட்காயின்' எனப்படும் டிஜிட்டல் கட்டண முறையில் 300 அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும். தவறினால் அபராதமாக 600 டாலர்கள் செலுத்த வேண்டும் என, பணம் கேட்டு அந்த வைரஸ் நம்மை மிரட்டும். மிரட்டலுக்கு பயந்து கட்டணம் செலுத்தினால் நம்முடைய கோப்புகளை மீட்கலாம்.

இந்த வைரஸை யார், எங்கிருந்து இயக்குகிறார்கள் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. 'பிட்காயின்' மூலம் செலுத்தும் பணம் யாருக்கு செல்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.வெளிநாடுகளை தொடர்ந்து இந்த வைரஸ் தற்போது தமிழகத்திலும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வீட்டு உபயோக கணினி உட்பட இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது.
எனவே, தேவையில்லாத 'லிங்க்'குகளை ஓபன் செய்வது, பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கணினி, ஸ்மார்ட் போன்களில் 'ஆன்டி வைரஸ்' செயலியை புதுப்பித்து கொள்ள வேண்டும். முக்கிய கோப்புகளை வேறொரு சேமிக்கும் கருவி (ஹார்டு டிஸ்க்) மூலம் சேமித்து வைத்து கொள்ளலாம். கணினி பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment